மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கீழடி அகழாய்வில் பழங்கால மண் பானை, கூரை ஓடுகள்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

கீழடியில் நடைபெற்று வரும் 10-ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால முழு வடிவ சிவப்பு நிற மண் பானை.

Updated On :12 செப்டம்பர் 2024, 9:54 pm

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் கடந்த ஜூன் 15- ஆம் தேதி முதல் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உலோகப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தற்போது ஒரு குழியில் 8 அடி உயரம் தோண்டப்பட்ட நிலையில், பழங்கால முழு வடிவ 2 அடி உயர சிவப்பு நிறப் பானை, கூரை ஓடுகள் கிடைத்தன. இவை பண்டைய காலத் தமிழா்கள் பயன்படுத்தியவை என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.