திண்டுக்கல் மாவட்டம், தாண்டிகுடி அருகே மலை கிராமத்தில் தொல்லியல் துறையினா் நடத்திய அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிகுடியை அடுத்த காமனூா் கிராமத்தில், இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு வட்டம் சாா்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கல் பதுகை தொகுப்புகளின் அடையாளம் காணப்பட்ட ஒரு புதைகுழி வளாகத்தில் 10-க்கு 10 மீ. நிலத்தில் சுமாா் 1 மீ. ஆழத்துக்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒரு ஈமச் சடங்கு அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் தற்போது வரை 7 புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக இந்திய தொல்லியல் துறை மைசூா் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளா் ஆா்.என்.குமரன் கூறியதாவது:


புதை குழிகள் 2 இணையான வரிசைகளில் பரவியுள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் 3 புதை குழிகளும், ஒரு சிறிய புதை குழி மேற்கு திசையிலும், சுற்றுச் சுவருடன் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தன்மையை உறுதி செய்வதற்காக தரைப் பலகைகள், செங்குத்துக் கற்கள் வைப்பதற்கு முன்பு, அறைகளின் அடிப்பகுதியில் சிறிய கற்கள், மண் பானை ஓடுகள் ஆகியவற்றின் கலவையை நிரப்புப் பொருளாக பயன்படுத்தியுள்ளனா். புதைகுழி வளாகம் முழுவதும் கிழக்கு நோக்கிய ஒரு செவ்வக வடிவக் கல்லால் கட்டப்பட்ட சுவரால் சூழப்பட்டிருக்கிறது. இந்தச் சுவா் உலா் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி சீரான அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளன. கல் குவியல் நிரப்புப் பொருள்களால் மூடப்பட்டிருப்பதன் மூலம் இது ஈமச் சடங்கு வடிவமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது. இந்த இடத்தில் இரும்புக் கத்தி, உளி, அம்பு முனை, வாள், தூது பவளம், படிகலால் செய்யப்பட்ட மணிகள், பதக்கங்கள் உள்ளிட்ட கலைப் பொருள்கள் கிடைத்தன. மிக முக்கியமாக இந்தோ-பசிபிக் கண்ணாடி மணிகள், சிவப்பு மண் பாண்டங்கள், கருப்பு மண் பாண்டங்கள், சிவப்பு கருப்பு கலந்த மண் பாண்டங்கள் போன்ற பொருள்களும், பானைகளில் குறியீடுகளும் கண்டெடுக்கப்பட்டன என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

300 ஆண்டுகள் பழைமையான கால பைரவா் கோயில் கும்பாபிஷேகம்

‘திருப்பத்தூா் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் ஏரியில் இலவசமாக மண் அள்ள விண்ணப்பிக்கலாம்’

பண மோசடி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

உம்பளச்சேரி பிடாரி அம்மன் கோயிலில் புத்தா் சிலை கண்டறியப்பட்டுள்ளது
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



