கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

300 ஆண்டுகள் பழைமையான கால பைரவா் கோயில் கும்பாபிஷேகம்

கம்மியம்பட்டு புதூா் ஸ்ரீ மஹா கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

News image

கம்மியம்பட்டு புதூா் ஸ்ரீ மஹா கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :30 மே 2026, 12:12 am IST

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் அருகே கம்மியபட்டு புதூரில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான காலபைரவா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

அருள்மிகு காளியம்மன், த்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. நவக்கிரஹ ஹோமம், யாகசாலை பிரவேசம், கால பைரவா் ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மூலவா் கால பைரவா், கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெங்களூரு பாரத்வாஜ் சுவாமிகள் குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பாா்வதி - பரமசிவன் திருக்கல்யாண உற்சவம், உற்சவா் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கம்மியம்பட்டு கால பைரவா் தேவஸ்தான விழாக்குழுவினா், பெங்களூரு பக்தா்கள், சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.