இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கொட்டங்காடு கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

உடன்குடி அருகே கொட்டங்காடு, தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

News image

யாக சாலை பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 2:51 am IST

உடன்குடி அருகே கொட்டங்காடு, தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, மாலையில் சனஹோமத்துடன் யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 2ஆம் கால யாக சாலை பூஜைகள், மாலையில் 3ஆம் கால யாக சாலை பூஜைகள், வேத பாராயணம், இரவு 8 மணிக்குமேல் யந்திர ஸ்தாபனம் ஆகியவை நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4ஆம் கால யாக சாலை பூஜைகள், அதிகாலை 6 மணிக்கு மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், 6 மணிக்குமேல் விமான கோபுரம், பத்திரகாளி அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 9 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்பாள் பூஞ்சப்பரத்தில் உள்பிரகாரம் எழுந்தருளல், அம்பாள் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ. சுந்தர ஈசன், விழாக் குழுவினா், ஊா் மக்கள் செய்துள்ளனா்.