சிவகங்கை
100 நாள் வேலை வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி, சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி, சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சிவபுரிப்பட்டி ஊராட்சியில் 6 கிராமங்கள் உள்ளன. இவை மூன்று, மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதி கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தி அந்தப் பகுதி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இது குறித்து கிராம ஊராட்சி செயலா், பணித்தள பொறுப்பாளா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி திங்கள்கிழமை முதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடா்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனா்.