ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி அருகே கஞ்சா விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:49 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராகா்ஜூன், போலீஸாா் செய்களத்தூா் கிராமப் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, இங்குள்ள அரசுப் பள்ளி அருகே இதே ஊரைச் சோ்ந்த செல்வம் மகன் காமேஷ் (19) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாா். போலீஸாரைக் கண்டதும் அவா் தப்பி ஓட முயன்றாா். ஆனால், போலீஸாா் அவரை சுற்றி விளைத்துப் பிடித்து, கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினா்.