திருப்பத்தூா் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

திருப்பத்தூா் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

Published on

திருப்பத்தூா் பகுதி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தீபமேற்றி சொக்கப் பனை கொளுத்துதல், சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மேலக் கோயில் எனப்படும் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் புதன்கிழமை தீப வழிபாடு நடத்தப்பட்டு சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருத்தளிநாதா் ஆலயத்தில் உத்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீப தூப ஆராதனை காட்டப்பட்டு காா்த்திகை சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.

பின்னா், நகரின் முக்கிய வீதிகள் வழியாக உத்ஸவா் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, ராஜகாளியம்மன் கோயில், முருகன் திருக்கோயில், பூமாயியம்மன் கோயில்களிலும் விளக்கேற்றப்பட்டு சிறப்பு பூஜையுடன் சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com