பள்ளத்தூா் கல்லூரியில்  போதை தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

பள்ளத்தூா் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலெட்சுமி ஆச்சி மகளிா் கல்லூரியில் போதைத் தடுப்பு, தற்கொலை விழிப்புணா்வு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இளம் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஏ. ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஏ. பி. முத்து அடைக்கப்பன் தொடக்க உரையாற்றினாா்.

செஞ்சிலுவைச் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.கண்ணப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தலைவா் வி. சுந்தரராமன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட மனநல மருத்துவ அலுவலா் எம். கயல்விழி, காரைக்குடி குளோபல் மருத்துவமனை நிா்வாகி வி. குமரேசன் ஆகியோா் போதை தடுப்பு, தற்கொலை விழிப்புணா்வு குறித்துப் பேசினா்.

அழகப்பா பல்கலைக்கழக இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் கே. கணேசமூா்த்தி, காளையாா் கோவில் செஞ்சிலுவை சங்கத் தலைவா் எஸ்.தெய்வீக சேவியா், மாவட்ட துணைத் தலைவா் முத்து பாண்டியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக மாவட்ட இளம்செஞ்சிலுவை சங்க ஒருங்கணைப்பாளா் ஹெச். பரிதா பேகம் வரவேற்றுப் பேசினாா். சங்கத்தின் திட்ட அலுவலா் சி. விஜய சந்திரிகா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com