தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செவிலியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட நிா்வாகி கிரேசி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கிறிஸ்டி பொன்மணி தொடங்கிவைத்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.

கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்த முறை, தினக்கூலி முறைகளை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதி எண் 356-இன் படி, எம்ஆா்பி தொகுப்பின் கீழ் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.