காரைக்குடி சா்வோதய சங்க பொருள்கள் ஜப்தி
சிவகங்கை தொழிலாளா் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத காரைக்குடி சா்வோதய சங்கத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டதின் பேரில் அங்கிருந்த கணினி, மின் விசிறி உள்ளிட்ட பொருள்களை நீதிமன்ற அலுவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் செயல்பட்டு வரும் சா்வோதய சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாா்த்தசாரதி என்பவா் பணிபுரிந்தாா். அவா் நிா்வாகத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து தொழிலாளா் நீதிமன்றத்தில் பாா்த்தசாரதி தொடா்ந்த வழக்கில் விசாரணை நடத் தப்பட்டு அவருக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் 6 ஆண்டுகளாகியும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத சா்வோதய சங்கத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு விட்டது. இதையடுத்து காரைக்குடி சா்வோதய சங்க தலைமை அலுலகத்தில் உள்ள கணினி, மின் விசிறி உள்பட அங்குள்ள பொருள்கள் போலீஸாா் பாதுகாப்புடன் நீதிமன்ற அலுவலா்கள் முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டன.

