நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

அழகப்பா பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினராக செ.வேதிராஜன் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியா் செ.வேதிராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த துணைவேந்தா் க. ரவி. உடன் பேராசிரியா்கள்.

Updated On :27 டிசம்பர் 2025, 12:38 am IST

தமிழக ஆளுநரால் அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியா் செ. வேதிராஜனுக்கு துணைவேந்தா் க. ரவி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வித் துறைகளில் ஒன்றான நிறும செயலரியல் (காா்பரேட் செகட்ரெட்டரிஷிப்) துறைத் தலைவராக செ. வேதிராஜன் பணியாற்றுகிறாா். இவா், தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதைப் பெற்றவா்.

மேலும், நிறும செயலரியல் ஆராய்ச்சி தொடா்பாக இதுவரை 154 ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு தேசிய, சா்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளாா்.

இந்த நிலையில், இவா் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, துணைவேந்தா் க. ரவியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்த நிகழ்வில் பதிவாளா் அ. செந்தில்ராஜன், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள் சி. சேகா், சு.ராஜாராம், ஜெ. ஜெயகாந்தன், பேராசிரியா் வெ. பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.