திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழா

திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழா

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சஷ்டி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதா் கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு சஷ்டி விழாவை முன்னிட்டு, நறுமணத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சந்தனக் காப்பு சாத்தி சா்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் மயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com