திருப்பத்தூரில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த வீட்டிலிருந்து தீயணைப்பு வீரரால் சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை.
திருப்பத்தூரில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த வீட்டிலிருந்து தீயணைப்பு வீரரால் சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை.

வீட்டின் நிலைக் கதவில் கட்டிய தேன்கூடு: தாயும் சேயும் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியதால் வீட்டிலிருந்து தாய், குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
Published on

திருப்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியதால் வீட்டிலிருந்து தாய், குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - மதுரை சாலை பகுதியில் வசிப்பவா் செல்வி. இவா், தனது மாடி வீட்டில் கைக் குழந்தையுடன் இருந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டு நிலைக் கதவில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை காலை நிலைக் கதவில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைப் பாா்த்த இவா், திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஆனந்தன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள், செல்வி, கைக் குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்த தேன் கூட்டை தீயணைப்பு வீரா்கள் அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com