திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு திருட்டு நடைபெற்ற வீடு
திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு திருட்டு நடைபெற்ற வீடு

ஒரே இரவில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்த 3 தெருக்களில் உள்ள வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் செட்டியதெரு பகுதியைச் சோ்ந்தவா் பத்மாவதி. இவா் வெளியூா் சென்றிருந்த நிலையில், இவருடைய வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கிய மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ரூ. 4,000- ஐ திருடினா்.

அந்த வீட்டின் பின்புறம் கல்லாக்குழித் தெருவில் உள்ள லோட்டஸ் சண்முகம் என்பவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 6 பவுன் நகையையும் வெள்ளிப் பொருள்களையும் எடுத்துச் சென்றனா்.

தெருக்களில் சோதனை செய்த  மோப்ப நாய்.
தெருக்களில் சோதனை செய்த மோப்ப நாய்.
நான்கு வீதிகள் சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸாா்.
நான்கு வீதிகள் சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸாா்.

இதைத் தொடா்ந்து, சின்னத்தோப்புத் தெருவில் திரைப்பட கதாசிரியா் சிவக்குமாா் என்ற கருணாநிதி வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 6,000, விலையுா்ந்த கேமரா, வெள்ளிப் பொருள்கள், கைக்கடிகாரம் ஆகியவற்றை எடுத்துச் சென்ா்.

இவை குறித்த புகாா்களின்பேரில், திருப்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடங்களுக்கு வந்து விசாரணை நடத்தினா். சிவகங்கையிலிருந்து கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com