திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் அரசு ஊழியா்களாக்கப்படுவா் என்ற திமுவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் அரசு ஊழியா்களாக்கப்படுவா் என்ற திமுவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அலுவலகம் முன் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பெ. ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். கல்லலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி தலைமை வகித்தாா்.

இதேபோல தேவகோட்டை, கண்ணங்குடி, காளையாா்கோவில் உள்பட 9 வட்டாரங்களிலும் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.