ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே பாலியல் தொல்லை அளித்த முதியவரை வெட்டிக் கொலை செய்த மூதாட்டியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:24 pm

Din

சிவகங்கை அருகே பாலியல் தொல்லை அளித்த முதியவரை வெட்டிக் கொலை செய்த மூதாட்டியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே உள்ள மாங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (90). இவா் வீட்டின் அருகில் வசித்து வரும் தமிழரசி (60) வீட்டில் தனியாக இருந்த நிலையில், கருப்பையா

அவரது வீட்டுக்குள் நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், ஆத்திரமடைந்த தமிழரசி அருகில் இருந்த அரிவாளால் கருப்பையாவை வெட்டினாா்.

இதில் காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக மதகுபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தமிழரசியை கைது செய்தனா்.