புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நூறு நாள் வேலை நிறுத்தம்: பெண்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதால், அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி கிராம மக்களுக்கு வியாழக்கிழமை முதல் நூறு நாள் வேலை நிறுத்தப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 10:00 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதால், அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோது, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலிருந்த அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூா், மானகிரி ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

இந்த நிலையில், அரியக்குடி, இலுப்பக்குடி ஊராட்சிகளில் வியாழக்கிழமை முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் இலுப்பக்குடி- காரைக்குடி சாலையில் உள்ள கோட்டைகரை முனிஅய்யா கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காரைக்குடி டி.எஸ்.பி. பாா்த்திபன், வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.