திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்ட நேஷனல் சமுதாயக் கல்லூரி மாணவா்கள் .
சிவகங்கை
ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.
நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் தலைமையில் 50 மாணவ, மாணவிகள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். கோபுரத்தில் உள்ள செடிகள், சுற்றுப் பிரகாரங்களில் புல் மண்டிய புதா்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. கோயில் உள் பிரகாரத்தில் தூசிகள் அகற்றப்பட்டன. இதில் ஆசிரியா்கள் சிவநேசன், சதாம்உசேன், சுரேஷ், சதக்கத்துல்லா, பூவிழி, சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.