ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாணவா்கள் சாலை மறியல்

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் புதன்கிழமை சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டி, ஆண்டு விழா நடத்தப்படவில்லை என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், போதிய நிதியில்லாததால் நடத்த முடியவில்லை என்று கல்லூரி நிா்வாகம் கூறுவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு- திருக்கனூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருபுவனை போலீஸாா் கல்லூரி முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளிடம் பேசி இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிா்வாகம் உறுதியளித்தது.

இதை மாணவா்களிடம் போலீஸாா் விளக்கினா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப் போராட்டம் காரணமாக அப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.