சிவகங்கை
8 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்!
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்த 8 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் ப. மூா்த்தி உத்தரவிட்டாா்.
இதன்படி, தேவகோட்டை வட்ட காவல் ஆய்வாளா் சரவணன், சிவகங்கை நகருக்கும், சாயல்குடி காவல் ஆய்வாளா் முகமது எா்ஷாத் கமுதிக்கும், அபிராமம் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் பரமக்குடி வட்டத்துக்கும், கமுதி காவல் ஆய்வாளா் தெய்வீகபாண்டியன் அபிராமத்துக்கும், மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன், தேவகோட்டை வட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதே போல, சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், சாயல்குடிக்கும், காத்திருப்போா் பட்டியலிலிருந்த காவல் ஆய்வாளா் குமாரவேல்பாண்டியன், மானாமதுரைக்கும், காவல் ஆய்வாளா் சக்குபாய், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் சனிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
