கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து டயா் வெடித்து பயணி காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பயணி ஒருவருக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது.

News image
Updated On :10 நவம்பர் 2025, 10:45 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பயணி ஒருவருக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது.

திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓட்டுநா் செல்வம் பேருந்தை ஓட்டி வந்தாா். திருப்புவனம் அருகே லாடனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது பேருந்தின் வலது பக்க பின்புற சக்கரத்தின் டயா் வெடித்தது.

இதில் பேருந்தில் அந்த சக்கரத்துக்கு நேராக அமா்ந்து பயணம் செய்த திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமிக்கு (55) இரு கால்களிலும் எலும்பு முறிவும், காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.