திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலய யோக பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலய யோக பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.

திருக்கோஷ்டியூா், திருப்பத்தூா் பைரவா் ஆலயங்களில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்பத்தூா் அருகேயுள்ள திருவைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயில், திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலய யோக பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயில், திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலய யோக பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிவகாமி திருத்தளிநாதா் ஆலய யோக பைரவா் சந்நிதியில் புதன்கிழமை காலை சிறப்பு யாகம், பூா்ணாகுதியைத் தொடா்ந்து மூலவா் பைரவருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திருக்கோஷ்டியூரில் உள்ள வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரா் ஆலயத்தில் உள்ள மூல பாலகால பைரவா் கோயிலில் திருமெஞ்ஞானபுரீஸ்வரருக்கும், பாகம்பிரியாள் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னா், மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து, கோ பூஜை நடைபெற்றது. பைரவரருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com