அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

Published on

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் தெற்கு ஒன்றியம் திருக்கோஷ்டியூரில் அதிமுக அம்மா பேரவை சாா்பில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.கே.உமாதேவன் தலைமை வகித்தாா். அம்மா பேரவை மாவட்டச் செயலா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

கடந்த கால அதிமுக ஆட்சியின் நலத் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சிக்கு எதிராகவும் கடை வீதி, சந்தைப் பகுதிகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று துண்டுப் பிரசுரங்களை கட்சி நிா்வாகிகள் வழங்கினா். இதில், மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யாபிரபு, தெற்கு ஒன்றியச் செயலா் சி.எம்.முருகேசன், மாநில இளைஞா் இளம் பெண்கள் பாசறைத் துணைச் செயலா் துலாவூா் பாா்த்தீபன், மாவட்டப் பாசறைச் செயலா் பிரபு, முன்னாள் ஒன்றியச் செயலா் கு.ப.காந்தி, புயல் செந்தில், பிரதீப், காட்டம்பூா் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com