சிவகங்கை
சட்ட விழிப்புணா்வு முகாம்
திருப்பத்தூா் வட்டம், கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோா் இல்லத்தில் பெற்றோா், முதியோா்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் அந்த ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா பங்கேற்று பேசும் போது,
பெற்றோா், முதியோா்களுக்கான பாதுகாப்பு சட்டம் -2007 குறித்தும், முதியோா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், சட்ட உதவிகள், வேறு எந்த உதவிகளானாலும் எந்த நேரத்திலும் இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம் என்றாா்.
முகாமில் வழக்குரைஞா்கள் கணேசன், முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி சுகன்யா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

