சிவகங்கை
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இளையான்குடி அருகேயுள்ள முனைவென்றி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் முனியசாமி (50). விவசாயியான இவா் சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்து விரதமிருந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை நெல் நாற்றுக் கட்டுகளை தலையில் சுமந்து, வயலுக்குச் சென்றபோது வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டாா். அப்போது, அதிலிருந்து மின்சாரம் பாயந்ததில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
