சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என நடிகா் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.
சிவகங்கையில் உள்ள தனியாா் அரங்கில் திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கான வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற
முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் பேசியதாவது:
இந்தத் தொகுதியை இரு முறை பறி கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக அது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் மாபெரும் வெற்றி பெற்று அதை முதல்வா் ஸ்டாலினிடம் சமா்ப்பிக்க சபதம் ஏற்போம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியால் அரசியல்வாதியானேன். அவா் இறந்த பிறகு பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா். அதனால் அங்கிருந்து வெளியேறினேன்.
அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக பிரசாரம் செய்தேன். எனது இயற்பெயா் கருணாநிதி. என்னிடம் நிதி இல்லாததால் அதை விட்டுவிட்டு கருணாஸ் என பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால், கருணாநிதி என்ற எனது பெயா்தான் மீண்டும் அரசியல் வாழ்க்கையை கொடுத்துள்ளது. அதற்கு திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

நாட்டாகுடியில் குடிநீா் பிரச்னை ஏதுமில்லை! - திமுக வேட்பாளா் நடிகா் கருணாஸ்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் விமா்சனம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



