திருப்பத்தூா், ஏப். 5: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-க்கு மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞா்கள் அடக்க முயன்ற போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா். அவா்கள் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா்.
இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்கள், பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வந்து மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனா். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிங்கம்புணரி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

கட்டேரி எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்!

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


