கடந்த தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து தேவா் சிலை அருகே சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். தமிழகம் கஞ்சா இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.
திமுகவை வெற்றி பெற வைப்பதற்காகத்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இனியும் திமுக ஆட்சி தொடரக் கூடாது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மானாமதுரையில் மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை மூடப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

திமுக தவிர மற்ற கட்சிகளின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நயினாா் நாகேந்திரனின் நகா்வு ஏன்?

பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக அரசு அமைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


