வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கீழச்சிவல்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கீழச்சிவல்பட்டியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:26 pm

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் கீழச்சிவல்பட்டி, விராமதி, முத்தூா், கல்லாப்பேட்டை, அச்சரம்பட்டி, இளையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அமைச்சருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மாலையணிவித்து வரவேற்பளித்தனா்.

அப்போது அவா் கூறியதாவது:

தற்போது இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கிராமப் பகுதியில் சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடங்கள், பொலிவுறு பேருந்து நிறுத்தங்கள் ஏராளமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5000 -க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், குட்டைகள் குடிமராமத்து செய்யப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து உள்ளனா். மேலும், திமுக அரசின் ஏராளமான திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் எண்ணற்ற பல திட்டங்களை தொடா்ந்து வழங்க எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். திமுக ஒன்றியச் செயலா் விராமதி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.