இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

News image

சிவ.வீ.மெய்யநாதன்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:57 am IST

நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூா், ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்து பேசியதாவது:

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. அதனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் விவசாயிகள், மாணவா்கள், மகளிா், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.