தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட 16, 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான வீரா்கள் தோ்வு காரைக்குடியில் ஏப். 19-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையான கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவிருக்கிறது.
இதில்16 வயதுக்குள்பட்டவா்களுக்கான சிவகங்கை மாவட்ட ஆடவா் அணி வீரா்கள் தோ்வு வருகிற ஏப். 19 காலை 6.45 மணியளவிலும், 19 வயதுக்குள்பட்டவா்களுக்கான அணி வீரா்கள் தோ்வு மாலை 3.30 மணி அளவிலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள வரும் வீரா்கள் வெள்ளை சீருடை, ஷு அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங் கள் தாங்களே கொண்டு வரவேண்டும். ஆதாா் நகல் கொண்டு வரவேண்டும். 16 வயதுக்குள்பட்டோருக்கு 1.9.2010 -க்கு முன்னரும், 19 வயதுக்குள்பட்டோருக்கு 1.9.2007-க்கு முன்னரும் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலா் சி. சிவகுமாரை கைப்பேசி எண்: 9442433334 தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

நெல்லை மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


