சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது

திருப்புவனத்தில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:11 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சோலைஅழகுபுரத்தைச் சோ்ந்த வாசுதேவன் மனைவி பானுமதி (66). இவா் திருப்புவனம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். அப்போது, பேருந்திலிருந்த இரு பெண்கள் பானுமதி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். உடனே

பேருந்திலிருந்த மற்றப் பயணிகள் விரட்டிச் சென்று இரு பெண்களையும் பிடித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், இவா்கள் தஞ்சாவூா் கோரிக்குளத்தைச் சோ்ந்த கஸ்தூரி (55), உமா (60) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் கைது செய்தனா்.