கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி (62). கணவா் உயிரிழந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், தாயை கவனித்துக் கொள்ள கரூா் மாவட்டம், குப்பிச்சிபாளையம் அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்த ரெஹானா பானு (30) என்பவரை அங்கயற்கன்னி கடந்த வியாழக்கிழமை நியமித்துள்ளாா். சமையலறையில் அங்கயற்கன்னி கடந்த வெள்ளிக்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயாா் கூச்சலிட்டுள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது பணிக்கு நியமித்த ரெஹானா பானு கையில் பையுடன் வீட்டை விட்டு வேகமாக ஓடியுள்ளாா்.
அப்போது, தான் அங்கயற்கன்னியின் தாயாா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ரெஹானா பானு தப்பியது தெரியவந்தது.
இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அங்கயற்கன்னி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெஹானா பானுவைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகையைப் பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை

திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
