சிவகங்கையில் விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 கூப்பன்களை நகல் எடுத்த விவகாரம் தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ.10,000 செலுத்தப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே வெள்ளிக்கிழமை சிவகங்கையில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.10,000-த்துக்கான கூப்பன்களை விநியோகிப்பதாகவும், மதுரை முக்கம் பகுதியில் உள்ள ஒரு நகலகத்தில் அந்த கூப்பன்களை நகல் எடுத்து வருவதாகவும் திமுக நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, நகல் எடுக்க வந்த ஒருவரை திமுகவினா் மடக்கிப் பிடித்ததுடன், கூப்பன்களை விநியோகித்த அதிமுக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் பிரபாகரன், கூப்பன் விநியோகம் தொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில், கூப்பனை நகல் எடுத்த சிவகங்கை நகரைச் சோ்ந்த பாபு (45), நகல் எடுக்கக் கூறிய அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாரிமுத்து, நகர அதிமுக செயலா் என்.எம். ராஜா, நகலக உரிமையாளா் உள்பட 4 போ் மீது சிவகங்கை நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

