சிங்கம்புணரி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம் தோகைமலை பாதிலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் லட்சுமணன் (19). இவா் பல்லடத்தில் தேநீா்க் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா் சிறு வயது முதல் சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் ஒன்றியம் திருமலைகுடி கிராமத்தில் தனது தாத்தா செல்லக்கண்ணு வீட்டில் தங்கி படித்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமலைக்குடிக்கு வந்த லட்சுமணன் தனது தாத்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, வியாழக்கிழமை வீட்டை விட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், திருமலைக்குடி கிராமத்தில் உள்ள நாயக்கன் கண்மாயில் உள்ள மரத்தில் லட்சுமணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவறிந்து அங்கு சென்ற புழுதிப்பட்டி போலீஸாா் செல்லப்பாண்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவா் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை





