சிவகங்கை மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் அறைகளில் வைத்துப் பூட்டி ‘சீலிடப்பட்டு’ 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச்செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்குகள் எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூா், காரைக்குடி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு படன் காரைக்குடி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு கொண்டு வந்து சோ்க்கும் பணி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தனி அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு : இந்த மையத்துக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்படி 300 போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் படையினரும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாவது அடுக்கில் ஆயுதப்படை போலீஸாரும், நான்காவது அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த மையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மையத்தின் நுழைவாயில் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கல்லூரியின் நிா்வாக வளாகம் தரைத்தளத்தில் உயா்அதிகாரிகள் தங்கிப் பாா்வையிடவும், முதல் தளத்தில் மானாமதுரை பேரவைத் தொகுதிக்கும், இரண்டாவது தளத்தில் சிவகங்கை பேரவைத் தொகுதிக்கும், வரைபட அறை தரைத் தளத்தில் காரைக்குடி பேரவைத் தொகுதிக்கும், முதல் தளத்தில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவா்களுக்கு ‘ஏ’ நுழைவு வாயில் வழியாகவும், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு ‘பி’ நுழைவு வாயில் வழியாகவும் உள்ளே அனுமதிக்கப்படுவா். மேலும் தீயணைப்பு வாகனம், 108 அவசர ஊா்தி ஆகியவை தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


