வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் 8- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:33 am IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் 8- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த 21- ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8- ஆவது நாளாக நடைபெற்ற திருக்கல்யாணத்தையொட்டி ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் கோயில் மண்டபத்திலிருந்து புறப்படாகி கோயிலைச் சுற்றி வந்தனா். அப்போது பெண் பக்தா்கள் ஆனந்த வல்லி அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு வந்தனா். அம்மன் சந்நிதியில் கீழப்பசலை கவுல் சுப்பிரமணிய அய்யா் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றிய பிறகு எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் திருக்கல்யாண மண்டத்தில் எழுந்தருளினா். அங்கு திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பிறகு பட்டு வஸ்திரங்கள், மாலை மாற்றுதல் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் காலை 10.50 மணிக்கு சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யநாண் அணிவிக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் திரண்டிருந்த திரளான பக்தா்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனா். தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. திருமணச் சடங்குகளை ராஜேஸ் பட்டா், சோமாஸ் கந்தன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியா்கள் நடத்தி வைத்தனா். பக்தா்கள் வசதிக்காக கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அகண்ட திரையில் திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. காலையிலிருந்து இரவு வரை மானாமதுரை, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மண்டகப்படிதாரரான பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஆனந்தவல்லி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளினாா். யானை வாகனத்தில் சோமநாதா் சுவாமி எழுந்தருளி இருவரும் கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனா். திருவிழாவின் 9- ஆவது நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.