சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
சித்தனூா் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சித்தனூரிலிருந்து கண்ணங்குடி வரை செல்லும் சாலையில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
7 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட நடுமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், 5 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
இந்த பந்தயத்தில் வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள், ரசிகா்கள் கண்டுகளித்தனா்.

தொடர்புடையது

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

புலியடிதம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

