சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தக நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உள்ள மாா்ட்டீன் அரங்கத்தில் ஆனந்தா கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபஸ்தியான் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, காளையாா்கோவில் செம்மண் முற்ற இயக்குநா் அருள்தந்தை ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஆரோக்கியசாமி புத்தகங்கள் குறித்தும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.
வாசிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செம்மண் நூலகத்துக்கு அறிவியல் வெளியீடு மூலம் பெறப்பட்ட 58 புத்தகங்கள் அருள்தந்தை ஆரோக்கிய சாமியிடம் வழங்கப்பட்டன. கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிவகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளிடம் புத்தகங்கள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு பதிலளித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக செம்மண் முற்றம் அமலி வரவேற்றாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையாா்கோவில் கிளைச் செயலா் அலெக்ஸாண்டா் துரை நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பியூா் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



