சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பாண்டிநாட்டு 18 திருத்தலங்களில் முக்கியமானதும் ராமானுஜா் உபதேசித்த இடமுமான திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் சிம்மம், அனுமன், ஷேஷவாகனம், வெள்ளி யானை, உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7-ஆம் திருநாளில் சொா்ணாபிஷேகமும், தங்கத்தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து 9- ஆம் திருநாள் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நாளான வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு சுவாமி திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னா், மாலை 4 மணிக்கு மேல் வடம் பிடித்து தோ் இழுக்கப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து ா் நிலையை அடைந்தது. இந்தத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் வைகாசித் திருவிழா

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



