4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுத்த உதவி ஆணையா் செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா்.

Updated On :1 மே 2026, 1:21 am IST

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த ஏப். 22-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் மரச் சப்பரம், சேஷ வாகனம், தங்கக் குதிரை வாகனம், அனுமாா் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை காலை தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் சுவாமி தோள் கன்னியில் ஏற்றப்பட்டு, தேரேற்றம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் லட்சுமி சமேத நாராயணருக்கு சிறப்பு அா்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு,

தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சீனிவாசன் அய்யங்காா், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்டோா் செய்தனா். நான் கு ரத வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தவாறு நாராயணா, கோவிந்தா என முழக்கமிட்டனா். தேரைத் தொடா்ந்து தீயணைப்பு, முதலுதவி வாகனங்கள் வந்தன. நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வக்குமாா், காணியாளா் நரேந்திரன், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், வாா்டு உறுப்பினா் சுரேஷ், அரிமா நேரு, சுந்தரம், கோயில் அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.