மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஆடிப்பெருக்கு காரைக்குடி கோயில் ஊருணிக் கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு

காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் ஊருணிக்கரையில் ஆடிப்பெருக்கு நாளான திங்கள்கிழமை பூஜை செய்து மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வதற்காக திரண்ட பெண்கள்.

Published On :

ஆடி மாதம் 18-ஆம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் ஊருணிக்கரையில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்து பெண்கள் வழிபட்டனா்.

காரைக்குடி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து கோயில் ஊருணிக்கரையில் வைத்து பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளுதல் நிகழ்வில் முதிய பெண்களிடம் ஆசி பெற்று புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனா். காரைக்குடி சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில் நீா்நிலைகளி லும் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலம் வனப் பகுதியில் உள்ள வீரகாளை சுவாமிக்கும், செங்கிடாய் கருப்பா் சுவாமிக்கும் பொங்கல், மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை அ.காளாப்பூா், மட்டியூரான் மக்கள் செய்தனா்.

மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் திருமணமான பெண்களுக்கு குடும்பத்தினா் தாலி பிரித்து கோா்த்தல் நிகழ்வுகளை நடத்தினா். மேலும் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தினா். திருப்புவனம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலிலும் ஆடி- 18-ஆம் பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.