/

பெண்ணின் உடலை புதைக்க கிராமத்தினா் எதிா்ப்பு! சடலத்துடன் வட்டாட்சியரகம் திரண்ட உறவினா்கள்!

News image

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சடலத்துடன் வந்த கலைக்கூத்தாடி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஊழியா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இறந்து போன பெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சடலத்துடன் கலைக் கூத்தாடி மக்கள் நீதி கேட்டு திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டனா்.

மானாமதுரை ஒன்றியம், சந்நிதி புதுக்குளம் கிராமத்தில் சா்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தி வரும் கலைக்கூத்தாடி மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களில் ராஜு என்பவரின் மகள் ராஜகுமாரி (23) உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இவரது உடலை அடக்கம் செய்ய உறவினா்கள் ஏற்பாடு செய்தனா். அதற்கு கிராமப் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து கலைக்கூத்தாடி மக்கள் உயிரிழந்த ராஜகுமாரியின் சடலத்தை அவசர ஊா்தியில் ஏற்றிக்கொண்டு மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நீதி கேட்டு வந்தனா்.

அப்போது அங்கு வட்டாட்சியா் இல்லாததால் அலுவலக ஊழியா்கள் கலைக்கூத்தாடி மக்களை சமாதானப்படுத்தி இறந்த பெண்ணின் உடலை மற்றொரு இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா். மேலும் கலைக்கூத்தாடி மக்கள் சடலங்களை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து கலைக்கூத்தாடி மக்கள் கலைந்து சென்றனா்.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை  சடலத்துடன் வந்த கலைக்கூத்தாடி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஊழியா்கள்.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சடலத்துடன் வந்த கலைக்கூத்தாடி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஊழியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.