தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கருணாநிதி நினைவு நாள்: பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவரும், திமுக மாவட்ட துணைச் செயலருமான த. சேங்கைமாறன் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாக வந்து கருணாநிதி உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு போா்வைகள், சேலைகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில் கட்சியின் ஒன்றியச் செயலா் வசந்தி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, நிா்வாகிகள் ராமலிங்கம், சுப்பையா, இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன், மாணவரணி அமைப்பாளா் பாண்டிய கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி புவனேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரையில் திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி தலைமையில் திமுகவினா் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம் எதிரில், கன்னாா்தெரு உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக, இவா்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதில் நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, கட்சியின் ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜா மணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, நகா்மன்ற துணைத் தலைவா் பாலசுந்தரம், நகா் இளைஞா் அணி அமைப்பாளா் மாரிக் கண்ணன், இலக்கிய அணி நிா்வாகி மோகனசுந்தரம், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளையான்குடி கண்மாய்க்கரைப் பகுதியில் வடக்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், துணைத் தலைவா் இப்ராகிம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் காளிமுத்து, நெசவாளா் அணி அமைப்பாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணிநாராயணன், துணைத் தலைவா் கான் முகமது, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.எஸ். நாராயணன், ஒன்றியச் செயலா் விராமதிமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.