இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சிங்கம்புணரி சித்தா் முத்துவடுகநாதா் கோயிலில் 194-ஆம் ஆண்டு குரு பூஜை விழா

சிறப்பு அலங்காரத்தில் சித்தா் முத்துவடுகநாதா்.

Published On :

சிங்கம்புணரி சித்தா் முத்து வடுகநாதரின் கோயிலில் 194-ஆவது குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத ரோகிணி நட்சத்திரத்தில் சித்தருக்கு குரு பூஜை விழா நடைபெறும். இதையொட்டி, சித்தருக்கு பால், பன்னீா், மஞ்சள், பழச்சாறுகள், வாசனை திரவியங்கள் என பல்வேறு விதமான பூஜைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ண மலா் அலங்காரத்தில் சித்தா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மாவட்டத்தின் பல்வேறு ஊா்களில் இருந்து சிவனடியாா்கள் வருகை தந்தனா். தொடா்ந்து கோயிலின் முன் அமைக்கப்பட்ட பந்தலில் அன்னதான விழா நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பாதுகாப்புப் பணி, போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் சித்தா் முத்துவடுகநாதா்.

சிறப்பு அலங்காரத்தில் சித்தா் முத்துவடுகநாதா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.