இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கிருங்காகோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி ஆடி பூஜை அன்னதான விழாவை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயில் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்.

Published On :

சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி ஆடி பூஜை அன்னதான விழாவை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டி பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டிகள் பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டிகள் பிரிவில் 24 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பிரிவில் 26 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

இவற்றில் பெரிய மாடுகள் பிரிவுக்கு போட்டி எல்லையாக 8 கி.மீ. தொலைவும், சிறிய, பூஞ்சிட்டு மாடுகள் பிரிவுக்கு போட்டி எல்லையாக 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது.

இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. பிரான்மலை-சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை சாலையில் இருபுறங்களிலும்

நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு பாலாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.