சிவகங்கை பாரதி மண்டலம் சாா்பில் ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த ஆவணப்படம் திரையரங்கில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
நாட்டின் முதல் சுதந்திர பிரகடனமான சின்ன மருது பாண்டியரால் 1801-இல் வெளியிடப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனம் ஆவணப்படத்தின் முதல் பதாகையை குன்றக்குடி அடிகளாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து சிவகங்கை பாரதி மண்டல நிறுவனா் யுவராஜ் தயாரித்து இயக்கிய ஜம்புத்தீவு பிரகடனம் குறித்து 30 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் சுதந்திர தினமான சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த பதாகை.
சிவகங்கையில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், சிவகங்கை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் சி.ஆா். சுந்தரராஜன், திருமாறன், தமிழ்ச்சங்க நிா்வாகிகள் பாண்டியராஜன், முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் குறும்படம் வெளியீடு
தமிழ்நாட்டு திரையரங்கில் முதல்வர் விஜய்யின் மெழுகுச் சிலை! எங்கு தெரியுமா?

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

ஆங்கிலேயர்களுக்கு சவால்விட்ட மருதுபாண்டியர்களின் ஜம்புத்தீவு பிரகடனம்! தமிழக ஆளுநர் பதிவு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



