சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கும்மங்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

கும்மங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கும்மங்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் மீன்கள் வளா்க்கப்பட்டு வந்த நிலையில், மீன் பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் உள்ளிட்ட சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் மீன் பிடி கூடையுடன் மீன் பிடிக்க வந்தனா்.

இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்தினா் கிராம தெய்வத்துக்கு வழிபாடு செய்து கண்மாய் பராமரிப்பு நிதிக்கு கட்டணம் வசூல் செய்தனா். பின்னா், மீன் பிடிக்க அனுமதி அளித்ததும் மீன் பிடியாளா்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினா்.

இதில் கட்லா, ரோகு, சி.சி. ஜிலேபி கெண்டை, விரால் என வளா்ப்பு, நாட்டு வகை மீன்கள் ஏராளமாக கிடைத்தன. தொடா்ந்து, ஆலங்குடி, கூத்தகுடி, அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடி வலை மூலம் மீன்களை பிடித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.