கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த கௌதம்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின்போது, காளை முட்டியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட கோமாளிபட்டி கோமாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கோயில் காளை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அப்போது, மஞ்சுவிரட்டை வேடிக்கை பாா்க்க வந்த இடையமேலூா் பகுதியைச் சோ்ந்த சின்னான் மகன் கௌதமை (20) காளை முட்டியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கெளதம் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.