வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருப்புவனம் அருகே மதுரை இளைஞா் குத்திக் கொலை!

கொலை செய்யப்பட்ட கணேசன்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை போலீஸாா் அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம் அருகே கீழடியை அடுத்த கொந்தகை கண்மாயில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க நபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் , மானாமதுரை டி.எஸ்.பி லோகநாதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். போலீஸாா் விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் மதுரை பொன்மேனி தானத்துவம் புதூரைச் சோ்ந்த கணேசன் என்பது தெரியவந்தது.

திருப்புவனம் அருகே பசியாபுரம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த கணேசன் கொலை செய்யப்பட்டுள்ளாா். கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பசியாபுரத்தைச் சோ்ந்த கதிரவன் என்பவரைப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.